இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாளமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டை பயன்படுத்துவதற்கான விதிகளில் மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி மேல் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு ஆதார் அட்டையை காட்ட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

பதிவு செயல்பாட்டின் போது தகவல்களை வழங்கும்போது ஆதார் சரி பார்ப்பிற்கு ஆம் அல்லது இல்லை என்ற விருப்பத்தை தேர்வு செய்யும் வசதி தற்போது கொண்டுவரப்பட்டுள்ளதால் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். அரசு வைத்திருக்கும் பதிவுகளை மேலும் நம்பகத் தன்மை கொண்டதாக மாற்றுவதற்கு மத்திய அரசு இந்த புதிய விதியை கொண்டு வந்துள்ளது. இதுவரை ஆதார் அட்டை இல்லாமல் சான்றிதழ் வழங்கப்படாது என்ற நிலை இருந்த நிலையில் இந்த புதிய மாற்றம் தற்போது வரவேற்பு பெற்றுள்ளது.