மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 2009 ஆம் வருடம் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தோல்வி இல்லாமல் தேர்ச்சி செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் அம்மாநில அரசு 2019 ஆம் வருடம் இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதாவது ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வருடப்பொது தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது .அதில் ஐந்தாம் வகுப்பிற்கு 50 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு 10 மதிப்பெண்களுக்கு வாய்மொழி தேர்வு, எட்டாம் வகுப்பிற்கு 60 மதிப்பெண்கள் எழுத்து தேர்வு, பத்து மதிப்பெண்கள் வாய்மொழி தேர்வு நடத்தப்படும்.

குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மாதிரி வினாத்தாள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேர்வானது 2024 ஆம் வருடம் இரண்டாம் வாரத்தில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.