கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளியில் தேசிய கல்விக் கொள்கையின் படி மலையர் மற்றும் முதல் வகுப்பிற்கான வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுடைய சேர்க்கை எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படும் என்று பள்ளி நிர்வாகங்கள் வருத்தப்படுகின்றன. மேலும் 2024-25 ஆம் வருடத்திற்கான முதல் வகுப்பிற்கு தேவையான வயது வரம்புகளை பூர்த்தி செய்யாத மாணவர்களை சேர்க்கலாமா? என்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியுள்ளது.

இந்நிலையில் தற்பொழுது வெளியான அறிவிப்பின்படி எல்கேஜி மற்றும் யுகேஜிக்கு அனுமதிக்கப்படும் மாணவர்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் நான்கு மற்றும் ஐந்து வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இவ்வாறு பூர்த்தியடையாத குழந்தைகளை பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது. இதனால் பெற்றோர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். இருந்தாலும் பெரும்பான்மையான பள்ளிகள் அரசின் விதிகளை பின்பற்ற தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.