
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் சிவனை வழிபடும் தீவிர பக்தனான கண்ணப்பரை மையமாக வைத்து கண்ணப்பா என்ற தெலுங்கு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மது, சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மோகன்லால், காஜல் அகர்வால், அக்ஷய்குமார், பிரபாஸ் உள்ளிட்டோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். வருகிற 27ஆம் தேதி கண்ணப்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆக உள்ளது. இன்று கண்ணப்பா திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.