
ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கட்டாயம் சீருடை மற்றும் பேட்ச் அணிந்து வேலை பார்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது
ஓட்டுநர், நடத்துனார்கள் பணியின் போது சீருடை மற்றும் பேட்ச் அணிந்து பணிபுரிய வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் ஆகியோருக்கு மாநகர போக்குவரத்துக் கழக இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் மாநகர போக்குவரத்து கழகத்தைச் சார்ந்த அனைத்து பணிமணைகளிலும் வேலை பார்க்கும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கட்டாயம் சீருடை மற்றும் பேட்ச் அணிந்து பணிபுரிய வேண்டும். சிலர் பேட்ச் அணியாமல் பணி செய்வது குறித்து புகார் பெறப்பட்டுள்ளது. எனவே ஓட்டுனர், நடத்தினார்கள் சீருடை மற்றும் பேட்ச் அணிந்து பணிபுரிகிறார்களா என்பதை கிளை மேலாளர்களும், மண்டல மேலாளர்களும் கண்காணிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.