செல்போன் ரீசார்ஜ் காலம் முடிந்தவுடன் வெளிச்செல்லும் அழைப்புகளோடு (Outgoing), உள்வரும் அழைப்புகளையும் (Incoming) தொலைத்தொடர்பு நிறுவனங்கள் துண்டிப்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா, ரீசார்ஜ் செய்யவில்லை என்பதற்காக இன்கம்மிங் வசதியை நிறுத்துவது மிகவும் தவறான மற்றும் அநீதியான செயல் என்று சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, போதிய வருமானம் இல்லாத ஏழைகள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் இதனால் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் பெரும் இன்னல்களுக்கு ஆளாவதாக அவர் கவலை தெரிவித்தார்.
இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும் என்ற அவரது கோரிக்கை தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் ஆதரிக்கப்பட்டு விவாதமாக மாறியுள்ளது.
