திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் செல்விபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(23). இவர் மேலப்பாளையத்தை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியில் அடிதடி, கொலை முயற்சி, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களை பயமுறுத்தி வந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் மாரியப்பன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி இடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் எஸ்.பி மாரியப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இதேபோன்று திருநெல்வேலி மாவட்டம் உவரி பீச் காலனி சேர்ந்த கௌதம்(23) என்பவரும் வழிப்பறி மற்றும் கொலை முயற்சி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் போலீசார் இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட மாரியப்பன் மற்றும் கௌதம் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.