கர்நாடகாவில் ஏழாவது ஊதிய குழு இன்னும் அமல்படுத்தாத நிலையில் சம்பள உயர்வு இருக்குமா என்று அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதனிடையே மாநிலத்தில் ஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது அதேநேரத்தில் இந்த வருடம் ஊதிய உயர்வும் கிடைக்காமல் கூட போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும், ஊதியக் குழுவின் அறிக்கையை ஏற்று முதல்வர் நிதி ஒதுக்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சட்டசபை தேர்தலில் அறிவித்த ஐந்து உத்தரவாதத் திட்டங்களை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் இருப்பதால் தான் 7வது ஊதிய குழுவை அமல்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.