பொதுவாகவே நாம் ரயிலில் பயணம் செய்யும்போது ஜன்னலோர சீட் வேண்டுமென்று அடம் பிடிப்போம். பேருந்து மற்றும் ரயில் பயணம் என அனைத்திலும் ஜன்னல் ஓர சீட் தான் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் ரயில்வே இயக்கம் ஒருவகை ரயில் பெட்டிகளில் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் என எதுவுமே இருக்காது. அதாவது ஜன்னல்கள் மற்றும் கதவுகள் இல்லாத ரயில்கள் என் எம் ஜி பெட்டிகள் கொண்ட ரயில்கள் என்று அழைக்கப்படுகின்றது. எந்த ஒரு ரயில் பெட்டிகளின் ஆயுட்காலமும் 25 ஆண்டுகள் மற்றும் அதனை ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை பழுது பார்ப்பதன் மூலமாக நீட்டிக்க முடியும்.

எந்த ரயில் பெட்டியும் 25 வருடங்கள் நிறைவடையும்போது அதன் பிறகு ஐ சி எஃப் கோச் பயணிகள் ரயிலின் சேவையிலிருந்து நீக்கப்பட்டு விடும். அதன் பிறகு இது என் எம் ஜி பிரேக் என்ற பெயரில் ஆட்டோ கேரியர் ஆக பயன்படுத்தப்பட்டது. என் எம் ஜி என்பது புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட சரக்கு வண்டியை குறிப்பதாகும். இந்த பெட்டியில் உள்ள அனைத்து ஜன்னல்கள் மற்றும் கதவுகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. சீல் வைத்த பின்னர் கார்கள், மினி லாரிகள் மற்றும் டிராக்டர்களின் எளிதாக ஏற்று இருக்கும் வகையில் இந்த வேகன்கள் தயார் செய்யப்படும்.

புதிதாக மாற்றப்பட்ட பெட்டிகள் அதிவேகத்தில் செல்லக்கூடியதன் காரணமாக குறுகிய காலத்திற்குள் ஆட்டோ மொபைல்களை கொண்டு செல்வதற்கு ரயில்வேயில் திறனை அதிகரிக்க உதவுகின்றது. சாதாரண பெட்டியை NMG கோச்சாக மாற்றுவதற்கு அதில் உள்ள இருக்கைகள், மின்விசிறிகள் மற்றும் விளக்குகள் என அனைத்தும் அகற்றப்படும். அதேசமயம் இரும்பு பட்டைகள் போடப்படும். இதனை எதிர்கொள்ள கோச்சின் பின்புறத்தில் ஒரு கதவு பொருத்தப்பட்டு அதனை திறந்து சாமான்கள் வைக்கப்படும். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஏற்று இறக்கும் வகையில் இந்த பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளன.