தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயமாக மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்ற நடைமுறை  அமலாகியுள்ளது.

இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக் கவசம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. காரைக்காலில் கொரோனா தொற்றுக்கு பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் இதுதொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், திரையரங்கு, வணிக வளாகங்கள், மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பொதுஇடங்களில் மாஸ்க் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.