20 லட்சம் மொபைல் எண்களை மீண்டும் சரிபார்க்க தொலைதொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. சைபர் குற்றங்களுக்கு 28,200 செல்போன்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக காவல்துறை அளித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தொலைதொடர்பு துறை ஆய்வு செய்தது. அதில் அந்த செல்போன்களில் 20 லட்சம் எண்கள் பயன்படுத்தப்பட்டது தெரிந்ததால் செல்போன்கள் முடக்கவும் அந்த எண்களை மீண்டும் சரிபார்க்கவும் தொலை தொடர்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.