தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சம்யுக்தா மேனன். இவர் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சம்யுக்தா மேனன் தற்போது ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட பெண்களின் நலனை பாதுகாப்பதற்காக ஆதிசக்தி என்ற பெயரில் ஒரு அமைப்பினை தொடங்கியுள்ளார்.

அவர் பெண்கள் தன்மானத்தோடு வாழ வேண்டும் என்பதற்காகவும், எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகவும் அவர்களுக்கு கை கொடுத்து உதவுவதற்காக இந்த அமைப்பினை தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். இந்த அமைப்பின் மூலம் எல்லா வயதுடைய பெண்களுக்கும் நாங்கள் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு விதமான உதவிகளை செய்வோம் என்றும் கூறியுள்ளார். மேலும் நடிகை சம்யுக்தா மேனனுக்கு தற்போது பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Samyuktha (@iamsamyuktha_)