பாகிஸ்தான் நாட்டிலுள்ள பஞ்சாப் மாகாணத்தில் ஒரு வித்தியாசமான திருமணம் நடந்துள்ளது. அதாவது திருமண செலவை குறைப்பதற்காக ஆறு சகோதரர்கள் ஆறு சகோதரிகளை திருமணம் செய்துள்ளனர். அந்த ஆறு மணமகன்களும் மணமக்கள் வீட்டாரிடம் வரதட்சணை எதுவும் வாங்கவில்லை. இந்த திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில் 100 ‌ பேர் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இவர்கள் இஸ்லாமிய போதனைகளின் படி திருமணத்தில் எளிமையை கடைப்பிடிக்க விரும்பி இப்படி ஒரு திருமணத்தை செய்துள்ளனர். மேலும் தேவையில்லாமல் திருமணத்தை வைத்து நிதி நெருக்கடியில் சிக்க கூடாது என்பதாலும், வரதட்சணை வாங்குவது தவறு என்பதால் மணமக்கள் வீட்டார் இடமிருந்து எதுவுமே வாங்காமல் திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் ஆசிரியத்தை ஏற்படுத்திய நிலையில் இவர்களின் முடிவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவிக்கிறார்கள்.