தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது அஜித்துடன் சேர்ந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அதேபோன்று குட் பேட் அக்லி படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தி கோட் என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தில் வரும் மட்ட பாடலுக்கு நடிகை த்ரிஷா நடனமாடியுள்ளார்.

`அவர் மஞ்சள் நிற சேலையில் நடனமாடிய வீடியோ தற்போது இணையதளத்தில் படுவைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே விஜய் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள நிலையில் கில்லி படத்தில் வரும் அப்படி போடு பாடல் விஜய் மற்றும் திரிஷா காம்போவில் மிகவும் பிரபலம். மேலும் அந்த வகையில் தற்போது மட்ட பாடலுக்கும் இருவரும் சேர்ந்து நடனமாடியது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு அந்த வீடியோவை ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.