
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, தன்னை இழிவுபடுத்தும் வகையில் தவறான தகவல்களை கூறியதாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், ஜி மீடியா கார்ப்பரேஷன் நியூஸ் எதிராக ரூபாய் 100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சூதாட்டம் மற்றும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் என எம்.எஸ். தோனியை குறிப்பிட்டு கூறிய விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்த அவதூறு வழக்கில் தோனியின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி நியூஸ் நேசன் நெட்வொர்க்கிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு நியூஸ் நேசன் நெட்வொர்க் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவை மறு ஆய்வு செய்ய மறுப்பு தெரிவித்து அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.