
இந்திய அணிக்காக குறைந்தது ஐந்து டெஸ்ட் போட்டிகளை விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இதன் படி மூத்த வீரர் கவாஸ்கருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆனது 70 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்குகிறது. அதேபோல தோனி பிசிசிஐயிடம் இருந்து மாதந்தோறும் 70 ஆயிரம் ஓய்வூதியம் வாங்குகிறார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் தற்போது வருணனையாளராக இருக்கிறார். இவர் பிசிசிஐ இடம் இருந்து மாதந்தோறும் 60 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார்.
அதே போல யுவராஜ் சிங் 2020ஆம் வருடம் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் தற்போது 60 ஆயிரம் ரூபாய் மாதம் ஓய்வூதியம் வாங்கி வருகிறார். இந்த நிலையில் வினோத் காம்ப்ளி அதிகப்படியான குடிப்பழக்கம் காரணமாக அனைத்தையும் இழந்து கஷ்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. தற்போது பிசிசிஐ வழங்கும் ஓய்வூதியத்தை தன்னுடைய குடும்ப செலவுக்கு நம்பி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு மாதந்தோறு 30,000 வழங்குகிறது பிசிசிஐ.