இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவீட்டின் பதவிக்காலம் ஐசிசி டி20 போட்டியுடன் முடிவடைகிறது. இதனால்  பிசிசிஐ இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த 29-ம் தேதியுடன் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் கம்பீர ஆகியோர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கிய கம்பீர் இந்திய அணியின்  பயிற்சியாளராக தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் எம்.எஸ் தோனி இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படாதது ஏன் என்ற கேள்வி பல ரசிகர்கள் மத்தியில் இருக்கலாம். அதற்கான காரணம் குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது அனைத்து போட்டிகளில் இருந்தும்  ஓய்வு பெற்ற ஒருவர்தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட முடியும். எம்.எஸ். தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தற்போது சென்னை அணிக்காக ஐபிஎல் போட்டியில்  விளையாடி வருகிறார். மேலும் இதனால்தான் எம்.எஸ் தோனி தலைமை பயிற்சியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.