
உத்தரபிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூரில் நடந்த சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதாவது தர்மங்கடபூரைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சுர்ஜித், தந்தையுடன் புவையன் கல்லா மண்டிக்கு வந்திருந்தார். அங்கு நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்ச்சியின் போது, குழந்தை “இந்துஸ்தான் ஜிந்தாபாத், பாகிஸ்தான் முர்தாபாத்” என நாட்டுப்பற்று அடங்கிய கோஷங்களை எழுப்பினார். அதாவது இந்தியா வாழ்க பாகிஸ்தான் ஒழிக என்று சிறுவன் கோஷமிட்டான்
அந்தக் கோஷங்களை கேட்ட மொஹித் கான் மற்றும் வாசிம் என்ற இரண்டு இளைஞர்கள் கடும் கோபமடைந்தனர். முதலில் அந்தச் சிறுவனை அடித்துவிட்டு, பின்னர் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் சுர்ஜித்தின் கையில் ஆழமான கத்திக் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த தொழிலாளர்கள் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, இந்து யுவ சங்கதன் பாரத் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையம் நோக்கி பேரணி சென்றனர். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். போலீசார் தற்போது இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.