இந்தியாவில் பூஞ்சை தொற்று பாதிப்பானது அடிக்கடி காணப்படுகிறது. ஆனால் அதன் பரவல் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இந்நிலையில் முதல்முறையாக பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு குறித்து நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 5.60 கோடிக்கும் அதிகமானோர் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதில், 10 % பேர் அச்சுறுத்தும் கொடிய தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் ஆண்டொன்றுக்கு காசநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 லட்சத்துக்கு மேல் உள்ள நிலையில், பூஞ்சை தொற்றுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது.