பொதுமக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய மத்திய அரசானது பல வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில் இனி நீங்கள் இலவசமாக டிவி பார்க்கலாம். உங்களது டிவி பார்க்கும் செலவை மோடி அரசு ஏற்கும். பட்ஜெட்டுக்கு முன்னதாக அரசு இந்த பெரிய முடிவை எடுத்திருக்கிறது.

ஏற்கனவே இலவசமாக ரேஷன் வழங்கப்படும் என்ற முடிவை அடுத்து, தற்போது இலவசமாக தொலைகாட்சி பார்க்கும் வசதியை அளித்து மத்திய அரசு இதற்கான செலவை ஏற்கிறது. தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவின் நிலையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் இந்த பெரிய முடிவை எடுத்து உள்ளது. நாட்டின் தொலைதூர எல்லை மற்றும் பழங்குடியின பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக டிஷ் வசதி வழங்கப்படும் என அரசு தெரிவித்து உள்ளது.

இப்பகுதிகளிலுள்ள சுமார் 7 லட்சம் மக்களுக்காக இலவச டிஷ்கள் நிறுவப்படும். இந்த திட்டத்தின் வாயிலாக டிடிஎச் சேவையை விரிவுபடுத்துவதே மத்திய அரசின் திட்டம் ஆகும். மேலும் தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவிலுள்ள பழைய ஸ்டுடியோ உபகரணங்கள், OB வேனை முழுமையாக மாற்றுவதற்கான திட்டமும் தயாரிக்கப்படுகிறது.