உலக அளவில் பலர் புற்றுநோய் பாதிப்பினால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் நேற்று புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு நேற்று டெல்லியில் கேன்சர் முக்த் பாரத் அறக்கட்டளை ஆய்வு நடத்தியது. அதன்படி 1,869 புற்றுநோயாளிகளிடம் ஆய்வு நடத்தினார்கள். அந்த ஆய்வில் அதிகமாக தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

அதன்படி சுமார் 26 % மக்களுக்கு தலை மற்றும் கழுத்து புற்று நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இளைஞர்கள் அதிக அளவில் புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பயன்படுத்துவது போன்ற காரணங்களால் தான் இந்த வகை புற்றுநோய் என்பது அதிகரித்துள்ளது. மேலும் 80- 90% சதவீதம் பேர் புகையிலை போடுவதால் தான் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது என தெரியவந்துள்ளது. எனவே புகையிலை போடுவது மற்றும் சிகரெட் பிடிப்பது போன்ற பழக்கங்களை இளைஞர்கள் முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.