விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் சுமையை குறைக்க பாரத அரிசி என்ற பெயரில் சில்லறை சந்தையில் 29 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அரிசி அடுத்த வாரம் முதல் அனைத்து கடைகளிலும் கிடைக்கும். இணைய வழியிலும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசியின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரிசி இருப்பு வைத்திருக்கும் அளவு விவரங்களை தெரியப்படுத்த வேண்டும் என்று வணிகர்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

பாரத அரசியல் விற்பனைக்காக முதல் கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு ஒதுக்க உள்ளது. மேலும் அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவி வரும் நிலையில் அவ்வாறு எந்த ஒரு திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்றும் விலைவாசி குறையும் வரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.