கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் பண்டிகூட் என்ற மனித கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து மாநில நீர்வளத்துறை அமைச்சர் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். டிரோன் தொழில்நுட்பத்துடன் கூடிய அமைப்போடு இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரமானது கழிவுகளை பாதாள சாக்கடையிலிருந்து வெளியே எடுத்துப் போடுவதை செய்கிறது. இதில் கேமராவும், சென்சர்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இதனால் சாக்கடையில் நச்சு மிகுந்த வாய்களை முன்கூட்டியே கண்டறியும். மேலும் நீர் புகாத் தன்மையுடைய கருவிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் எந்தவித நீரினாலும் கருவிகள் சேதம் அடையாது. விரைவில் கேரள மாநிலம் முழுவதும் இந்த இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலமாக இந்தியாவில் மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திர தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் மாநிலம் என்று பெருமையை கேரள மாநிலம் பெற்றுள்ளது.