உத்திரபிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறும். இங்குள்ள திருவேணி சம்பவத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுகிறார்கள். இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு அழைத்த பேட்டியில் சனாதன தர்மம் என்பது இந்தியாவின் தேசிய மதம் என்று கூறியுள்ளார்.

அதாவது சனாதன தர்மத்தின் பிரதிநிதியாக மகா கும்பமேளா இருக்கிறது எனவும் சனாதன தர்மம் தன்னுடைய தேசிய மதம் என்றும் கூறினார். அது இந்தியாவின் தேசிய மதமாக இருக்கும் நிலையில் அது மனிதத்தின் மதம் எனவும் நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒன்று எனவும் தெரிவித்தார். மகா கும்பமேளா ஒற்றுமையின் செய்தியை கொடுக்கிறது. மேலும் இந்த மகா கும்ப மேளா நிகழ்வு எந்த மதத்திற்கும் ஜாதிக்கும் முற்பட்டது கிடையாது எனவும் அனைத்து மதம் மற்றும் ஜாதிகளை உள்ளடக்கியது என்றும் தெரிவித்தார்.