ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலத்தில் மத்திய தொழிற்படைபயிற்சி மையம் செயல்பட்டு வரும் நிலையில் இன்று அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். இதற்காக பாஜக சார்பில் அவருக்கு வரவேற்பு கொடுக்கும் விதமாக ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமித்ஷாவுக்கு பதிலாக நடிகரும் இயக்குனருமான சந்தான பாரதியின் புகைப்படத்தை போட்டு போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

அந்த போஸ்டரில் இந்தியாவின் இரும்பு மனிதரே வாழும் வரலாறே வருக வருக என்று எழுதப்பட்டுள்ளது. அதோடு பாஜக பொறுப்பாளர் அருள்மொழி இந்த போஸ்டரை ஒட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அருள்மொழி இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் என் பெயரை பயன்படுத்தி சில விஷமிகள் இதுபோன்று போஸ்டர் ஒட்டியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.