இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தெற்கு பிராந்திய மார்க்கெட்டிங் பிரிவுக்கு அப்ரண்டீஸ் அடிப்படையில் 400 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 2 நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 19ஆம் தேதி இரவு 11.55 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://iocl.com/apprenticeship என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.