சமீபத்தில் X-இல் (முன்னாள் ட்விட்டர்) வைரலாக பரவிய வீடியோ ஒன்றில், வீட்டு வாயிலை திறந்து வெளியே வந்த நபர் ஒருவர், நொடிக்குள் ஒரு ஸ்கூட்டர் மோதி கீழே விழும் அதிர்ச்சி தரும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்த 10 விநாடிகளுக்குள் பதிவான சிசிடிவி காட்சியில், ஒரு நபர் தனது வீட்டு வாயிலை திறந்து, தனது ஸ்கூட்டரை எடுத்துச் செல்ல முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக, வேகமாக வந்த மற்றொரு ஸ்கூட்டர் நேராக அவர்மீது மோதி, அவரை கீழே விழச் செய்கிறது.

வீடியோவை பார்த்தவர்கள் “யமராஜ் ஒரு நாள் விடுப்பு எடுத்திருந்தார் போல!” என நகைச்சுவையுடன் கூறும் நிலையில், இந்த சம்பவம் சாலையோர பாதுகாப்பு மற்றும் அக்கறையற்ற வாகன ஓட்டத்தைப் பற்றி சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது.