
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை பயனடையும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நழிவடைந்த மக்கள் பயன்பெறும் விதமாக அரசு சார்பில் ஏராளமான கடன் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமானோர் பயனடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் விவசாயிகளுக்காக தேசிய கால்நடை இயக்கம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு முன்பு கொண்டு வந்தது. இதன் மூலமாக கோழி, ஆடு, பன்றி வளர்ப்பு போன்ற தொழில் தொடங்குபவர்களுக்கு கடன் மற்றும் மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலமாக ஒரு கோடி கடனாக 50 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். இந்த திட்டத்தை ஒரு நபர் அல்லது குழுவாக பயன்படுத்திக் கொள்ளலாம். இது குறித்த முழுமையான விவரங்கள் அறிய என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.