
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என ஜெய்ஷா அறிவித்துள்ள நிலையில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளதால் அது தொடர்பாகவும் அவர் பேசியுள்ளார். அதாவது இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் ரோகித் சர்மாவுக்கு தற்போது 38 வயது ஆகிவிட்டதால் இந்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பை தான் அவருக்கு கடைசி போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் கேப்டன் பதவிக்கு ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் போன்ற பலர் போட்டியில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டி20 போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஜெய்ஷா பாண்டியாவின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசியுள்ளார். அதாவது பிசிசிஐ நடத்தும் அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா கலந்து கொண்டால் அவர் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். கடந்த காலங்களில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா உள்ளூர் போட்டிகளில் கலந்து கொள்ளாத நிலையில் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என அவரிடம் கூறப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் போட்டியில் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்றால், அவர் தன்னுடைய உடற்தகுதியை தெரிவிப்பதோடு அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.