100 நாடுகளில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான கிளைகளை கொண்டு இயங்கி வரும் SUBWAY உணவகத்தில் கிடைக்கும் சாண்ட்விச் சாலட் என அனைத்து உணவுகளுமே சுவையானதாக இருக்கும். இந்த உணவகத்திற்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் வாடிக்கையாளர்களை ஈர்க்க இந்த உணவகம் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஒரு நபரை தேர்ந்தெடுத்து அவருக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக உணவு வழங்க SUBWAY முடிவெடுத்துள்ளது.

ஆனால் இது எளிதில் கிடைத்து விடாது. அதற்கு subwaynamechange.com என்ற இணையதளத்திற்கு சென்று வாடிக்கையாளர்கள் அவர்களின் முதல் பெயரை Subway என்று மாற்றிக் கொண்டால் அவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் அவருக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரப்பூர்வமாக முதல் பெயரை மாற்ற ஆகும் செலவையும் SUBWAY உணவகமே பார்த்துக் கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது.