சமூக ஊடகங்களில் புகழ் பெறும் ஆசையில் இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களின் உயிரையே அஞ்சாமல் ஆபத்தான ரீல்ஸ் வீடியோ எடுப்பது தற்போது பரவலாக காணப்படும் ஒரு சம்பவமாக உள்ளது. அந்த வகையில், தற்போது வைரலாகும் ஒரு வீடியோ, பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அந்த வீடியோவில், ஒரு இளம்பெண் பாலம் ஒன்றின் கீழ் தூக்கி வைக்கப்பட்ட சங்கிலியிலிருந்து தொங்கியபடி, அருகில் இருந்த மற்றொரு சங்கிலியை பிடிக்க முயற்சி செய்கிறார். ஆனால், கை நழுவி போனதால் நதியில் கீழே விழுந்து நீரின் மிதக்க ஆரம்பிக்கிறார். இதைப் பார்த்த அங்கிருந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய துப்பட்டாவை அந்த பெண்ணை நோக்கி வீசி, அதனைப் பிடித்து பாரிகேட் வரை வரச்செய்து உயிரைக் காப்பாற்றுகிறார்.

இந்த வீடியோ, ‘Shifa Khan’ என்ற X கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. தற்போது வரை 525-க்கும் மேற்பட்ட லைக்குகள், பார்வையாளர்களின் பன்முக கருத்துகளுடன் வெகுவாகப் பகிரப்பட்டு வருகிறது. ஒருவர், “ஸ்வர்க்கம் செல்லதான் முயற்சி செய்தாள் போல”, மற்றொருவர் “வீடியோவைப் பார்க்கும்போது, குதிக்க முன்பே முடிவெடுத்ததுபோல் தெரிகிறது”, என கூறியுள்ளார்கள். இன்னொருவர், “இந்த அளவுக்கு நீரில் இறங்க என்ன அவசரம்?” என விமர்சித்துள்ளார்.

வீடியோவைப் பார்த்த பலரும் – “வாழ்க்கையை அபாயத்திற்கு உள்ளாக்கி ரீல்ஸ் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்று விழிப்புணர்வு தெரிவித்து வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள், இளைஞர்களுக்கு ஒரு பாடமாகவும், உணர்வுபூர்வமான எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.