
யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வபோது காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைவது வழக்கம். இந்த நிலையில் தமிழ்நாடு- கர்நாடகா இடையேயான பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு யானை நடமாடிக் கொண்டிருந்தது. அந்த யானை யாரையும் துன்புறுத்தாமல் அமைதியாக நின்றது.
ஆனால் அந்த வழியாக வந்த ஒரு நபர் அமைதியாக இருந்த யானை முன்பு நின்று புகைப்படம், வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அந்த நபர் யானையை துன்புறுத்தும் விதமாக நடந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ வைரலானதால் வனத்துறையினர் அந்த நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர்.