கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜான் சாக்கோ என்ற 20 வயது வாலிபர் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த மாணவர் சோம மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் ஜான் சாக்கோ வகுப்பறையில் வைத்து தான் காதலிக்கும் பெண்ணிடம் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். இதனை கல்லூரி நிர்வாகம் கண்டித்த நிலையில் மீண்டும் அதே போன்று அவர் வகுப்பறையில் வைத்து தன் காதலியுடன் பேசியுள்ளார்.

இதன் காரணமாக வீட்டிலிருந்தபடியே தேர்வு எழுதுமாறு கல்லூரி நிர்வாகம் அறுவறுத்தியுள்ளது. இந்நிலையில் மூன்றாம் ஆண்டு சேர்வதற்காக அவர் கல்லூரிக்கு சென்ற நிலையில் அவரை கல்லூரி நிர்வாகம் சேர்ப்பதற்கு மறுத்துவிட்டனர். இதன் காரணமாக கல்லூரி நிர்வாகம் மீது மாணவன் புகார் கொடுப்பதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற நிலையில் திடீரென அங்கேயே மயங்கி விழுந்தார். பின்னர் மாணவனை தட்டி எழுப்பி போலீசார் விசாரணை நடத்தியதில் பாத்ரூம் கழுவ பயன்படுத்தப்படும் பினாயில் மற்றும் எலிமருந்தை கலக்கி குடித்ததாக கூறினார். உடனடியாக மாணவனுக்கு முதலுதவி வழங்கப்பட்ட நிலையில் பின்னர் போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது உண்மையை கண்டறிவதற்காக காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் அடங்கிய டிவிஆர் பெட்டியை ஆய்வுக்காக போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.