
புதுச்சேரியில் பாமக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பாமக மாநில இளைஞரணி சங்க தலைவராக முகுந்தன் என்பவரை நியமித்தது தொடர்பாக பாமக கட்சி நிறுவனர் ராமதாசுக்கும் தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்கள் ஆனவருக்கு பதவி எதற்கு? என அன்புமணி ராமதாஸ் கூறினார். அப்போது ராமதாஸ் நான் உருவாக்கிய கட்சியில் நான் சொல்வதை கேட்காவிட்டால் யாரும் கட்சியில் இருக்க முடியாது என அழுத்தம் திருத்தமாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேடையிலேயே பனையூரில் எனக்கென தனி கட்சி அலுவலகத்தை அமைத்துள்ளேன். அங்கு வந்து என்னை சந்திக்கலாம் என அன்புமணி ராமதாஸ் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று பாமக நிறுவனர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, கட்சியினர் பொதுக்குழு கூட்டத்தில் காரசார விவாதம் நடப்பது. இயல்பு பா.ம.க ஜனநாயக கட்சி அதன் உட்கட்சி பிரச்சினைகள் குறித்து மற்றவர்கள் பேச வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளார்.