தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “சோதனைக்கு வரும்போது சில விரும்பத்தகாத சம்பவங்கள் நேர்ந்துள்ளது. இதுபற்றி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

சோதனை நடைபெறக்கூடிய இடங்களில் ஆதரவாளர்கள் யாரும் இருக்கக்கூடாது. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என நான் அறிவுறுத்தியதை தொடர்ந்து அனைவருமே கலைந்து சென்றனர். கடந்த 2006-ம் வருடம் முதல் இன்று வரை ஒரு சதுரடி நிலத்தை கூட நானோ என் குடும்பத்தினரோ பதிவுசெய்யவில்லை. நண்பர் வீட்டில் கேட்டை திறப்பதற்கு முன்னதாகவே வருமான வரித்துறை அதிகாரிகள் சுவர் ஏறி குதித்துச் சென்று உள்ளனர். அது எதற்காக?”என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.