இங்கிலாந்தை சேர்ந்த எலிசபெத் என்ற பெண் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து அலுவலகத்திற்கு சென்றதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டார். எலிசபெத் ஆடை கட்டுப்பாட்டு மீறியதாக நிறுவனம் அவரை பணி நீக்கம் செய்தது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக எலிசபெத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போது இளம் பணியாளர்களின் மீது உள்ள வெறுப்பு காரணமாகவே அந்த நிறுவனம் இவ்வாறு செய்தது விசாரணையில் உறுதியானது. இதனால் எலிசபெத்துக்கு 32 லட்சம் இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.