போக்குவரத்து நெரிசலுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பெயர் பெற்ற பெங்களூரு நகரில், கார் ஓட்டுநர் ஒருவர் தன்னுடைய வாகனத்தில் பயணிப்பவர்களுக்காக வித்தியாசமான எச்சரிக்கை அறிவிப்பை வைத்திருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. “இது உங்கள் தனிப்பட்ட இடம் அல்ல,” என்ற வாசகத்துடன் தொடங்கும் இந்த அறிவிப்பில், “வாகனத்தில் ஜோடிகள் ரொமான்ஸ் செய்யக்கூடாது. தயவுசெய்து தூரத்தை கடைபிடித்து அமைதியாக இருங்கள். மரியாதை கொடுங்கள், மரியாதை பெறுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு பொதுமக்கள் பயன்பாட்டு கேப் வாகனம் என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையைப் படித்த வலைதள பயனர்கள், கேப் டிரைவரின் நேர்மை மற்றும் வெளிப்படையான அணுகுமுறையை பாராட்டி வருகிறார்கள். “இதை எல்லா கேப்களிலும் வைத்துக்கணும்!” என சிலர் கருத்து தெரிவிக்க, “அவசரமாக ஒரு முறையான வழிகாட்டி தேவைப்படுகிறது!” என வேடிக்கையான மீம்கள் பகிரப்படுகின்றன. மேலும் சமூக ஒழுக்கத்தை வலியுறுத்தும் இந்த எச்சரிக்கை, நகரங்களில் அதிகரித்து வரும் ஒழுக்கக் குறைபாடுகளுக்கு எதிரான ஒரு சத்தமில்லா எதிர்வினையாக பார்க்கப்படுகிறது.