கோவிலில் பிரசாதம் என்றால், புளியோதரை, லட்டு, தயிர் சாதனம் போன்றவைதான் நினைவுக்கு வரும். ஆனால் ஒரு கோவிலில் பானிபூரிகள், சான்விஜ் மற்றும் வடாபாவ்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. ஜீவிகா மாதாஜி கோவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ராஜ்புத்பாராவில் அமைந்துள்ளது. 70 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில், மாதாஜிக்கு துரித உணவு வழங்கப்படுகிறது.

பெண் பக்தர்களும் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற விரதம் மேற்கொள்கின்றனர். மாதாஜி தங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அங்கு வரும் பக்தர்களுக்கு இந்த வகையிலான பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. அதே போல் நைவேத்தியமாக இந்த உணவுகள் கடவுளுக்கும் படைக்கப்படுகிறது.