பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். இவர் தற்போது ஹவுஸ்புல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அபிஷேக் பச்சன், அர்ஜுன் ராம்பால், தர்மேந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் ஜூன் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் நடிகர் அக்ஷய்குமார் தன்னுடைய படத்திற்கு தானே சென்று நேரில் ரிவ்யூ கேட்டார். இந்த படம் முதல் நாளில் 24 கோடியும் இரண்டாம் நாளில் 30 கோடியும் வசூலித்த நிலையில் நடிகர் அக்ஷய் குமார் தியேட்டர் வாசலில் நின்று ரசிகர்களிடம் ரிவியூ கேட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அவர் முகமூடி அணிந்து வந்து ரிவ்யூ கேட்ட நிலையில் ரசிகர்கள் யாரும் அவரை அடையாளம் காணவில்லை. மேலும் இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரின் முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)