ரயில் பயணம் என்பது நீண்ட தூரம் மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது. பலரும் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் அல்லது ஆன்லைன் செயலிகள் மூலம் முன்பதிவு செய்கிறார்கள். இந்நிலையில் டிக்கெட் முன்பதிவில் போது 45 பைசாவுக்கு பயணக் காப்பீடு எடுக்கும் வசதியானது வழங்கப்படும்.

பல பயணிகளும் இதை புறக்கணிக்கிறார்கள். ஆனால் புறக்கணிக்காமல் இருப்பது நல்லது. ரயில் விபத்தில் பயணிகள் இறந்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த காப்பீட்டின் மூலமாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். கடுமையான காயம் மற்றும் ஊனம் ஏற்பட்டால், 7.5 லட்சம் காப்பீடு கிடைக்கும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு 2 லட்சம் ரூபாய்  வழங்கப்படும்.