கரூர் ஸ்ரீ ஆரவாயி அம்மன் கோவில் திருவிழாவில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியை புறக்கணிப்பதாக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கூறியதாவது, சாமி கும்பிட அனைவருக்கும் உரிமை உண்டு. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா?

மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா..? இது ஜனநாயக நாடு சாமி கும்பிடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என நீதிபதிகள் காட்டமாக பதில் அளித்தனர். மேலும் கரூர் ஆட்சியர், மாவட்ட எஸ்பி, வருவாய் மண்டல அலுவலர் விழா குழு உறுப்பினர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.