தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் நேற்று முன்தினம் இன்ஸ்டாகிராமில் அதிகாரபூர்வமாக கணக்கு தொடங்கி இணைந்தார். அவர் இன்ஸ்ட்டாவில் இணைந்த சில நிமிடங்களிலேயே பல லட்சம் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்தனர். கிட்டத்தட்ட 22 மணி நேரத்தில் 50 லட்சம் (5K) பேர் விஜயை பின் தொடர்கின்றனர்.இதன் மூலம் குறுகிய நேரத்தில் இன்ஸ்டாவில் அதிக பாலோயர்களை கொண்டவர் என்ற பெருமையையும் விஜய் பெற்றுள்ளார்.