
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வரை வசூல் சாதனை புரிந்த நிலையில் இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் நிலையில் சமீபத்தில் படத்தின் புதிய போஸ்டரை மாவீரன் படக்குழு வெளியிட்டது. அதில் கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வரும் நிலையில் முதல் பாடல் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
அதன்படி மாவீரன் படத்தின் முதல் பாடல் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் இன்று படகுழு அறிவித்துள்ளது. மேலும் முதல் பாடல் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என்பதை படகுழு கிளிம்ஸ் வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
#SceneAhSceneAh First Single From #Maaveeran 🥁
Ithu Chumma Trailer Dhan Ma..😎 Main Picture from 17/02/23💥🎺
A @bharathsankar12 musical 🎵@Siva_Kartikeyan @madonneashwin @AditiShankarofl @ShanthiTalkies @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @dineshmoffl @saregamasouth pic.twitter.com/S6eseVgjuP
— Shanthi Talkies (@ShanthiTalkies) February 15, 2023