
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி மற்றும் பாடலை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். நடிகர் விஜய் வெறும் 5 நிமிடங்கள் மட்டும் தான் உரையாடினார். அவர் பேசியதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் முன்பும், தமிழக மக்கள் முன்பும் கொடியை அறிமுகம் செய்து வைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இது நம்முடைய கட்சிக்கொடி மட்டுமல்ல. வருங்கால தலைமுறையினரின் வெற்றிக்கொடி ஆகும். இனி நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம். இந்த நாளுக்காக தான் நாம் அனைவரும் காத்திருந்தோம். கட்சி மாநாடு எங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்து அறிவிப்பு விரைவில் நடைபெறும். கட்சிக் கொடிக்கான காரணம் குறித்து பிறகு தெரிவிக்கப்படும். மேலும் இதுவரை நமக்காக உழைத்தோம். இனி தமிழகத்துக்காக உழைப்போம் என்று கூறினார்.