அதிமுக ஆட்சிக்காலத்தின் போது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதன்பிறகு அவர் தன் பதவியை ராஜினாமா செய்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் அவர் துணை முதல்வராகவும் 4 வருடங்கள் ஆட்சியில் இருந்தனர். அதன் பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகமாகவே கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அவர் தனித்து போட்டியிட்ட நிலையில் வெற்றி பெறவில்லை. தற்போது இரட்டை இலை சின்னத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திடமும் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்நிலையில் ஓ பன்னீர்செல்வம் தற்போது திடீரென போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்துள்ளார்.

அதாவது புத்தாண்டு வாழ்த்து கூறவும் ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரிக்கவும் ஓபிஎஸ் சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சந்திப்பில் அரசியலில் இல்லாமல் இருக்காது. அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்தும் பாஜக கூட்டணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரஜினியை சந்தித்து ஓபிஎஸ் பேசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஓபிஎஸ் பாஜக கட்சியின் இணையலாம் என்று கூறப்படும் நிலையில் அவரோ அதில் இணைய வாய்ப்பு கிடையாது என்கிறார். மேலும் சமீபத்தில் சீமான் ரஜினிகாந்தை சந்தித்த நிலையில் தற்போது ஓபிஎஸ் அடுத்து சந்தித்துள்ளார். இதன் காரணமாக 2026 தேர்தல் கணக்கை மனதில் வைத்து தான் அவர் ரஜினியை சந்தித்ததாக கூறப்படுகிறது.