ஆந்திர மாநிலத்தில் உள்ள வேங்கடாபுரம் கிராமத்தில் தரகையா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவருடைய மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பாக சொந்த ஊருக்கு சென்ற நிலையில், தன் மனைவியை பார்க்க தாரகையா‌ முடிவு செய்தார். ஆனால் அவரிடம் போதிய பண வசதி இல்லை. அப்போது பேருந்து நிலையத்தில் கேட்பாரின்றி அரசு பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது.

அதோடு பேருந்தில் சாவியும் இருந்ததால் தாரகையா பேருந்தை எடுத்துக்கொண்டு மாமியார் வீட்டுக்கு சென்று விட்டார். இதைத்தொடர்ந்து பேருந்தை காணவில்லை என ஓட்டுனர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தாரகையா கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவருக்கு மனநல பாதிப்பு இருப்பதாக குடும்பத்தினர் கூறினார்கள். மேலும் இதனால் அரசு பேருந்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பிவிட்டனர்.