மத்திய பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என திமுக அரசு கூறிவரும் நிலையில் தமிழகத்தில் எப்போதும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கைதான் என தெளிவாக தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் தற்போது ஹிந்தியில் வாக்கு சேகரிப்பதற்காக போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதில் திமுக சார்பில் விசி சந்திரகுமார் போட்டியிடும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் இடையே நேரடி போட்டி என்பது உருவாகியுள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஹிந்தி பேசும் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் 15 ஆயிரம் ஓட்டுகள் உள்ளது. இதன் காரணமாக ஹிந்தியில் வாக்கு சேகரித்து நோட்டீஸ் அடித்து அவர்களுக்கு கொடுத்துள்ளனர். மேலும் இருமொழிக் கொள்கையை வலியுறுத்தி வரும் திமுக இப்படி தேர்தலுக்காக மட்டும் இப்படி செய்வது நியாயமா என நாம் தமிழர் கட்சியினர்  விளாசி வருகிறார்கள்.