
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு 2-வது முறையாக உலக கோப்பையை வென்றுள்ளது. இந்திய அணி உலக கோப்பையை வென்றுள்ள நிலையில் நாடு முழுவதும் மக்கள் அதை கொண்டாடி வருகிறார்கள். அதன் பிறகு இந்திய அணிக்கு முக்கிய பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நம்முடைய இந்திய அணி டி20 உலக கோப்பையை முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதை கொண்டாடுவதில் மகிழ்ச்சி. நம்முடைய இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிப்படுத்தி முறியடிக்க முடியாத சாதனையுடன் செய்து முடித்துள்ளது. மேலும் வாழ்த்துக்கள் இந்திய அணி என்று பதிவிட்டுள்ளார்.
Thrilled to celebrate our #MenInBlue for clinching their second #T20WorldCup with complete dominance!
Our Indian team showcased unparalleled brilliance in challenging conditions, finishing with an unbeaten record.
Congratulations, Team India! 🇮🇳🏆#INDvSA pic.twitter.com/DlYX2fXfcm
— M.K.Stalin (@mkstalin) June 29, 2024