கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுகவிற்கு எதிரான மனநிலையில் வாக்காளர்கள் இருந்தும் எதிர்க்கட்சிகளால் அந்த வாக்குகளை ஒட்டுமொத்தமாக சேகரிக்க முடியவில்லை. இதற்கு காரணம் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைக்காமல் தனித்தனியாக நின்றதால் திமுக எதிர்ப்பு ஓட்டுகள் அனைத்தும் சிதறி போனது.

இந்த நிலையில் பாஜகவின் தலைமையை ஏற்க அதிமுக முன் வந்தால் கூட்டணியை பற்றி யோசிப்போம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, பாஜக வாங்கும் இடத்தில் இல்லை என்றும் கொடுக்கும் இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.