நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள மளிகை கடையில் அரசு(22) என்பவர் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். கடந்த 2 மாதங்களாக அரசு மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரை திருச்செங்கோடு விவேகானந்தர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அரசுவின் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் பெரிய கட்டி வளர்ந்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மருத்துவர் செந்தூர் செல்வம் தலைமையிலான குழுவினர் அறுவை சிகிச்சை செய்து 2 கிலோ எடையுள்ள அந்த கட்டியை அகற்றினர்.

அதன் பிறகு சிகிச்சை பெற்று அந்த வாலிபர் வீடு திரும்பினார். பொதுவாக உயர்தர சிகிச்சைகள் பெற மக்கள் பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டும். ஆனால் விவேகானந்தா மருத்துவமனையில் அந்த சிகிச்சை அளிக்கப்படுவதால் பொதுமக்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவமனை தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.